• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

December 25, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுனர் ஜீவானந்தம் என்பவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் அடுத்த இஎஸ்ஐ மருத்துவமனை பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் ஜீவானந்தம். ஆட்டோ டிரைவர் ஆன இவருக்கு சொந்தமான இடம் சிங்காநல்லூர் இ எஸ் ஐ மருத்துவமனை எதிரில் உள்ளது. மேலும் இவர் அரசு இடத்தை ஆக்கிரமித்து ஹோட்டல் மற்றும் பெட்டிக்கடை அமைத்துள்ளதாக சூலூர் கலங்கல் பகுதியை பகுதியைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழக மாநில அமைப்பாளர் லோட்டஸ் மணிகண்டன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த ஜீவானந்தம் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீதும் தனது குடும்பத்தார் மீதும் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.அப்போது அங்கிருந்த பத்திரிக்கை யாளர்கள் அவரை தடுத்து அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஜீவானந்தம் சூலூர் பகுதியை சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பாளர் லோட்டஸ் மணிகண்டன் என்பவர் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் அதனால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். மேலும் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க