December 25, 2020
தண்டோரா குழு
கோவை மைல் கல் பகுதியில் துவங்கப்பட்ட பிரபல ஆர்.கே.டெண்டல் கிளினிக்கை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.
அனைத்து விதமான பல் பிரச்னைகளுக்கும் கோவையில் தனி சிறப்பு பெற்ற ஆர்.கே. பல் மருத்துவமனை மதுக்கரை மரப்பாலம் மற்றும் கோவைபுதூர் என இரு கிளைகளை கொண்டு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மைல்கல் பகுதியில் தனது மூன்றாவது பல் மருத்துவமனையை ஆர்.கே.டெண்டல் கிளினிக் துவக்கியுள்ளது. இதற்கான துவக்க விழாவில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் கலந்து புதிய கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் சிறப்பு அழைப்பாளராக நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் கலந்து கொண்டார்.
புதிய கிளினிக்கில்,பல் எடுத்தல்,வேர் சிகிச்சை, பல் சீரமைப்பு,குழந்தை பல் மருத்துவம் என பற்கள் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் நவீன உபகரணங்கள் கொண்டு சிகிச்சை அளிக்கபடுகிறது.இதன் துவக்க விழாவில், சிறப்பு பல் சிகிச்சை நிபுணர் பிரயதர்ஷனி மற்றும் பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளியின் தலைமை செயல் அதிகாரி நித்யா ராஜ்குமார் குத்துவிளக்கேற்றினார்.விழாவில் ஆர்.கிருஷ்ணசாமி,மதுக்கரை முன்னால் பேரூராட்சி தலைவர் சண்முகராஜா, ஜோசப்ராஜா,வார்டு செயலாளர்கள் செல்லப்பன்,செல்வராஜ் மற்றும் வேலுச்சாமி, சின்னச்சாமி,காளிமுத்து,சக்திவேல்,பழனியம்மாள்,கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.