December 24, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்.எஸ்புரம் வெங்கடசாமி சாலை, பொன்னுரங்கம் சாலை, பெரியசாமி சாலை, புன்னியகோடி சாலை ஆகிய பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்பு மற்றும் மீட்டர் இணைப்பு பொருத்தப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (ஸ்மார் சிட்டி) சரவணக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.