December 24, 2020
தண்டோரா குழு
அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து திமுகவினர் வீடு வீடாக பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக, கோவை மலுமிச்சம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
கோவை மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டியில் தி.மு.க.சார்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகம் முழுவதும், தலைவர் தளபதியின் அறிவிப்பிற்கு ஏற்ப வரும் ஜனவரி 10 ந்தேதி வரை திமுக சார்பில் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.இந்த ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும், அராஜக ஆட்சி, ஊழல் ஆட்சி, குறிப்பாக இங்கு உள்ள வேலுமணியின் பல்வேறு ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வருகிறோம். அவர்களின் குற்றசாட்டுகளை ஆளுநரிடன் தளபதி தலைமையில் அளித்துள்ளோம். இதனை மக்களிடம் விளக்கும் வகையில் கிராம சபைகள் நடைபெறுகிறது.அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து திமுகவினர் வீடு வீடாக பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அதிமுக ஆட்சியை ஒழிக்க வேண்டுமென திமுக இறங்கியுள்ளதுவரலாறு காணாத எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது ஆட்சி மாற்றத்திற்கான அடையாளம் தெரிகிறது என்று கூறினார்.
தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில், அ.து.மு.கவை நிராகரிக்கிறோம் எனும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மதுக்கரை ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் MRR .பிரகாஷ்,மாவட்ட கஙுன்சிலர் ராஜன், மதுக்கரை ஒன்றிய செயலாளர் ராஜசேகர்,கதிரேஷ்குமார்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.