December 23, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சாலையில் சண்முகபுரம் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் மீன்வளர்ப்பு கடையில் யானையின் தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றத்தடுப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவின் பெயரில் மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு குழுவினருடன் மீன்வளர்ப்பு கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானையின் இரண்டு தந்தங்களையும் பறிமுதல் செய்தனர் .விசாரணையில் கடையின் உரிமையாளர் உட்பட 6 பேர் இந்த தந்தங்களை விற்க முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஆறு நபர்களையும் பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.