• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர் – மும்பை இடையே புதிய நேரடி விமான சேவை கோஏர் இன்டியா துவக்கம்

December 23, 2020 தண்டோரா குழு

இந்தியாவின் அதிக நம்பிக்கை பெற்ற கோஏர், உள்நாட்டு விமான போக்குவரத்தில், கோயம்புத்தூர் – மும்பை இடையே புதிய விமான சேவையை நாளை (24.12.2020) முதல் துவக்குகிறது.

இந்தியாவின் அதிக நம்பிக்கை பெற்றுள்ள கோஏர் விமான சேவை, கோவை, மும்பை இடையே நேரடியாக அதிநவீன ஏர்பஸ் 320 நியோ விமானத்தை இயக்குகிறது. கோவையில் வசிப்போர் விரைவாகவும், வசதியாகவும் சென்று வரும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை எளிதாக அனைத்து முன்பதிவு வசதிகளிலும் பெறலாம். கோ ஏர் விமானம் ஜி8 0331 மும்பையிலிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு 14.30 மணிக்கு வந்து சேருகிறது. மீண்டும் ஜி8 0332 விமானமாக 15.00 மணிக்கு கோவையிருந்து புறப்பட்டு மும்பைக்கு 16.50 மணிக்கு சென்றடைகிறது.

தமிழகத்தின் தொழில், கல்வி, மருத்துவத்தின் மையமாக விளங்கும் இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களில் மிக வேகமான வளர்ச்சியை பெற்று வரும் நகரம் கோயம்புத்தூர். சென்னைக்கு அடுத்தபடியாக, தகவல் தொழில்நுட்பம், அது சார்ந்த சேவைகளை வழங்கி வரும் நகரமாக உள்ளது. ஆழியாறு அணை, குரங்கு அருவி, சிறுவாணி அணை, சோலையார் அணை, தாவரவியல் பூங்கா, பழப்பண்ணை மற்றும் வைதேகி அருவி ஆகிய சுற்றுலா தலங்களைக் கொண்டுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களின் அருகில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற ஊட்டியையும் கொண்டுள்ளது.

இதுகுறித்து கோஏர் தலைமை செயல் அதிகாரி கவுசிக் கோனா கூறுகையில்,

‘‘உள்நாட்டு சந்தையில் எங்களது வளர்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாக கோவையில் நுழைகிறோம். உள்நாட்டு விமான பயணத்தில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த நவம்பர் வரை 63.54 லட்சமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் 10 சதவீத வளர்ச்சியாக உயர்ந்துள்ளது. தேவையின் அடிப்படையில், புதிய விமான சேவையை கோவைக்கு துவக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது பயணிகளுக்கு தொடர்ந்து சிறப்பான போக்குவரத்து இணைப்பையும், வாய்ப்பையும் தரும் முயற்சியில் கோஏர், இதை முக்கியமான நடவடிக்கையாக கருதுகிறது. அமெரிக்காவின் அபெக்டஸ் நிறுவனத்தின் ஆய்வில், 2021 ம் ஆண்டின் நான்கு நட்சத்திர குறைந்த கட்டண சேவை தரும் நிறுவனமாக கோஏர் தேர்வு பெற்றுள்ளது. கோவை மும்பை இடையே நேரடி விமான சேவை, கோவையின் வணிகம், சுற்றுலா வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.

பரவசமூட்டும் ‘கோஹாலிடே’ திட்டத்தில், பயணிகள் சிறந்த சலுகை கட்டணத்தை தேர்வு செய்யலாம். கொடைக்கானலில் மூன்று நாட்கள், இரண்டு இரவுகள் மகிழ்ச்சியுடன் தங்கலாம். இந்த பயணத்திட்டத்தில் திரும்பும் விமான கட்டணம், மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, காலை உணவு, விமான நிலையத்திலிருந்து செல்லவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் வசதிகள் இருக்கும்.

கோஹலிடே திட்டத்தில் கோவையிலிருந்து ஊட்டி செல்லும் திட்டமும், ஊட்டி, கொடைக்கானல் இரண்டுக்குமான திட்டமும் உள்ளது. பயணிகள் http://goholiday.in/ என்ற இணையத்தளத்தை பார்வையிட்டு விபரங்களை அறியலாம். மேலும் தகவல் அறிய 080-47112757 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

மேலும் படிக்க