December 23, 2020
தண்டோரா குழு
கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அதானி, அம்பானி குழுமங்களின் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தை AIYF அமைப்பினர் முற்றுகையிட்டனர்.
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு மூன்று வேளான் சட்டங்களை இயற்றியுள்ளது, இதற்கு நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களை, பல்வேறு அமைப்பினர் முன்னேடுத்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று கோவை மசக்காளிபாளையம் பகுதியில், AIYF சார்பில் அதானி அம்பானிகளின் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக பீளமேடு மசக்காளிபாளையம் பாளையம் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடையை AIYF அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை தடுக்கும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்த பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நிறுவனம் முன்பாக போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டவாரு கடையை முற்றுகையிட முயன்றனர், இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் AIYF அமைப்பில் உள்ள சூலூர் பகுதியை சேர்ந்த பவன்குமார் முற்றும் குணசேகரன் அதேபோல் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த நிர்வாகிகளை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.