• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலையாள சினிமா இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு

December 23, 2020 தண்டோரா குழு

மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ்.ஏராளமான மலையாள சினிமாவில் எடிட்டராக பணிபுரிந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடாவிட்டாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில் பிரபல நடிகர் ஜெயசூர்யாவை நாயகனாக வைத்து சூபியும் சுஜாதயும் என்ற பெயரில் ஒரு படத்தை இவர் இயக்கினார். இந்த சமயத்தில் தான் கொரோனா பரவல் காரணமாக லாக் டவுன் அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த படத்தை ஓடிடியில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மலையாள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்திற்காகக் கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 9 மணியளவில் இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க