December 23, 2020
தண்டோரா குழு
கோவையில் தி.மு.க.சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் எனும் தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அண்மையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. சாய்பாபாகாலனி பகுதி கழகம் சார்பாக 46 வது வார்டு காமராஜபுரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பகுதி செயலாளர் ரவி தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் கலந்து கொண்டார். இதில்,ஆளும் அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு குறித்து பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே எடுத்து கூறப்பட்டது. தமிழக அரசின் தோல்விகள் குறித்தும் அ.தி. மு.க.வை.நிராகரிக்கிறோம் எனும் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வார்டு செயலாளர் பாபு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஆனந்தகுமார் நந்தகுமார் ஆறுமுகன் கிருஷ்ணராஜ் பிரபு பகுதி துணை அமைப்பாளர் கண்ணன் தொழில்நுட்ப பிரிவு வினோத் இளைஞரணி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.இன்று துவங்கி 10 நாட்களுக்கு கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16 ஆயிரம் கிராமசபை கூட்டங்கள் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.