• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீண்ட இடைவெளிக்கு பின் ரயில்வே பணிமனையில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை

December 23, 2020 தண்டோரா குழு

சேலம் கோட்டம் கோவை ரயில்வே பணிமனை ஊழியர்கள் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடினர்.

வருடம் தோறும் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடும் பனைமனை ஊழியர்கள் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கினால் பல்வேறு பண்டிகைகளை கொண்டாட முடியாமல் போனது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நீண்ட நாள் இடைவெளிக்கு பின் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதில் சாண்டா வேடமணிந்தும் சாண்டா முகமுடி அணிந்தும் ஆடல் பாடல்களுடன் இப்பண்டிகையை கொண்டாடினர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பணிமனையில் இது போன்று மகிழ்ச்சியான நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதெனவும் வருகின்ற வருடம் அனைவருக்கும் இனிதே அமைய வேண்டும் என்றும் பணிமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க