• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசை வார்த்தை வாயிலாக பெண்களை வசியம் செய்து பணம் பறிக்கும் பலே கில்லாடி குமார்

December 20, 2020 தண்டோரா குழு

பெண்களை வசியம் செய்து தன் வலையில் வீழ்த்தி மிரட்டி பணம் சம்பாதித்து வந்தவன் காசி. குமரி மாவட்டை சேர்ந்த காசி ஏற்படுத்திய தாக்கம் தணியும் முன்னரே தமிழகத்தில் மீண்டும் ஒரு காசி உலாவுகின்றானா என்ற வினா எழுகின்ற அளவுக்கு கோவை பாப்பம்பட்டியில் பரபரப்பான சம்பவம் நிகழ்ந்திருக்கின்றன.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவன் குமார். ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வரும் குமார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜேசிபி ஆப்ரேட்டர் பணிக்காக செல்வது வழக்கம். அவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோவையை அடுத்த சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவு ஜேசிபி ஆப்பரேட்டர் பணிக்காக வந்திருக்கிறான். அப்பொழுது அங்கு பிரபு என்பவரது வாடகை வீடுகளில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளான். அவ்வாறு தங்கியிருந்த போது பிரபுவின் மனைவியை ஆசை வார்த்தை கூறி தன் வலையில் சிக்க வைத்துள்ளான். இதனை சாதகமாக பயன்படுத்தி வசதிபடைத்த பிரபுவிடம் இருந்து பணத்தை கறக்க திட்டம் தீட்டினான். அதன்படி அவரது மனைவியை கடத்திச் சென்றுள்ளான்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீட்டில் பிரபு இல்லாதபோது அந்தப் பெண்னை கடத்திச் செல்ல குமார் மற்றும் அவனது நண்பர்கள் 3 பேர் என நான்கு பேர் முகத்தில் முகமூடியை கட்டிக்கொண்டு அங்கு வந்துள்ளனர். அந்தப் பெண்ணின் மாமியாரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அந்த பெண்ணை கடத்திச் சென்றனர். அப்பொழுது வீட்டில் இல்லாத பிரபு மனைவி கடத்தப்பட்ட சம்பவம் தகவல் தெரிந்து குமாருக்கு அழைத்து பேசியிருக்கிறார். அப்பொழுது தனக்கு பணம் ஒரு லட்சம் கொடுக்க வேண்டுமெனவும் இல்லை என்றால் பாம்பே பெங்களூர் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று இரண்டு லட்சம் அல்லது மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்றுவிடுவேன் என மிரட்டுகின்றார்.

இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிரபு கடத்தபட்ட மனைவியை மீட்டு தர கேட்டுக்கொண்டுள்ளார். பெண் காணாமல் போயிருப்பதாக வழக்கு பதிவான நிலையில் போலீஸ் தனிப்படை அமைத்து அந்த பெண்ணையும், அப்பெண்ணிற்க்கு வலை வீசிய குமாரை போலிஸ் வலை வீசி தேடி சென்றுள்ளனர்.

குமாரை பற்றி விசாரித்த பொழுது குமார் இதுபோன்று குடும்ப பெண்களை குறிவைத்து அவர்களை தன் வலையில் வீழ்த்தி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது தெரிய வந்திருக்கின்றன. அக்கம்பக்கம் அவர் தங்கியிருக்கும் பகுதிகளில் உள்ள பெண்களிடம் நண்பர்கள் போல பழகி அப்பெண்களின் கணவர் மீது குற்றம் சுமத்தி அப்பெண்களை தன்வசப்படுத்துவது இவனது வேலை. தன்னுடன் வா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறும் இவன் தன் நண்பரின் காதலி என்றும் தன் காதலி என்றும் அவ்வப்போது அவனது நண்பர்கள் வீட்டுக்கும் அவரது வீட்டுக்கும் அழைத்து சென்று உலாவருவருகின்றான். இது தொடர்பாக குமாரின் பிடியில் சிக்காத பெண் தகவலை தெரிவித்தார். தன்னிடமும் இது போன்று ஆசை வார்த்தை கூறியதாக கூறும் அவர் தான் சிக்கவில்லை என்றும் அந்த பெண் சொன்னார். பல பெண்களை ஆசை வார்த்தை கூறி தன் வலையில் வீழ்த்தும் குமார் காசு கேட்டு மிரட்டுவதால் பெண் கடத்தல் சம்பவங்களில் இவனுக்கு தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளன.

இது தொடர்பான விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் இப்பெண்ணை கடத்த கத்தியுடன் வந்த மற்ற மூன்று நபர்கள் உட்பட அனைவரையும் சூலூர் போலிஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும்,குமார் மீது ஏற்க்கனவே சில வழக்குகள் தமிழகத்தின் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே காசி வழக்கு விஸ்வரூபமாக சென்று கொண்டிருக்கும் வேலையில் காசி பாணியில் நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவத்தால் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டன.

மேலும் படிக்க