• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நான்கு திசை வேளாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

December 20, 2020 தண்டோரா குழு

வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்கக்கூடாது என்று கோரி
கோவையில் நான்கு திசை வேளாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

கோவையில் நான்கு திசை வேளாளர்கள் சங்கத்தின் சார்பில், கோவை தெற்கு தாலுகா, செஞ்சிலுவை சங்கம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது.தமிழகத்தில் நான்கு சமூகத்தை சேர்ந்தவர்கள் ’வேளாளர்’ என்ற பெயரை புனைப்பெயராக வைத்துள்ளனர். இந்த சூழலில், வேளாளர் என்ற பெயரை மாற்று சமூகத்தினருக்கும் வழங்குவதாக பா.ஜ.க ல்.,வினர் கூறி வருகின்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு திசை வேளாளர்கள் சங்க்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, வேளாளர் என்ற பெயரை மற்று சமுகத்தினருக்கு வழங்க கூடாது என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மாநில கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவை தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி ராஜேந்திரன், நான்குதிசை வேளாளர்கள் சங்கம்
மாநில தலைவர் கொங்கு கே. தேவராஜ், காப்பாளர் கே.ஆர் சிவதேசிகன் பிள்ளை, மாநில அமைப்பாளர் நாட்டாமை மணிவண்ணன், சோழிய வேளாளர் சங்க தலைவர் ஏ. ஜெகதீசன், 3 மந்தை 84 நான்கு ஊர் சோழிய வேளாளர் சங்கத்தின் தலைவர் கே. பழனிசாமி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சேலம் பி.ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர்கள் அணி செயலாளர் என்.மணிவண்ணன். கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரசாந்த் மற்றும் 40 ஜாதிகளின் தலைவர் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க