• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது – எஸ்.பி.வேலுமணி

December 19, 2020 தண்டோரா குழு

கோவை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

காந்திபுரம் மூன்றாவது வீதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்

பின்னர் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசியதாவது:-

இந்த மினி கிளினிக் மூலம் நடுத்தர ஏழை மக்கள் பயனடைவார்கள். கோவையில் 70 கிளினிக்குகள் அமைய உள்ளது. அதில் 30 கிளினிக்குகள் முதற்கட்டமாக செயல்பட உள்ளது.இந்த கிளினிக்குகள் மாலை 8 மணிவரை செயல்படும்.பல்வேறு நோய்களுக்கும் இங்கு சிகிச்சை வழங்கப்படும். இதனை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டமாக நேரடியாக சென்றவர். ஒரு அறையில் இருந்து கொண்டு மக்களை சந்திக்காமல் அறிக்கை மட்டும் விடும் திமுக தலைவரைப் போல அல்ல.கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கியுள்ளோம், சத்துமாத்திரைகள் வழங்கியுள்ளோம். இப்படி மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறோம்.

கோவை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப் பட்டுள்ளது. கோவையில் அனைத்து சாலைகளும் அகலப்படுத்தப்பட்டு விபத்துகள் 80 சதவீதம் குறைந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க