• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

250 மில்லி கிராம் தங்கத்தில் பனி மலையில் கிறிஸ்மஸ் குடில் உருவாக்கி யு.எம்.டி.ராஜா

December 18, 2020 தண்டோரா குழு

250 மில்லி கிராம் தங்கத்தில் பனி மலையில் கிறிஸ்மஸ் குடில் ஐந்து சிறிய மான்கள் கிறிஸ்மஸ் தாத்தா வாகனத்தில் அழைத்துச் செல்வது போன்ற சிறிய சிற்பத்தை கோவையை சேர்ந்த யு.எம்.டி.ராஜா உருவாக்கியுள்ளார்.

கோவையை சேர்ந்தவர் யு.எம்.டி.ராஜா. பண்டிகை மற்றும் குடியரசு,சுதந்திர தின நாட்களில் சிறிய அளவிலான பல்வேறு விதமான ஓவியம் மற்றும் கலைகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவரான இவர் இதில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார். இந்நிலையில்,கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை வரவேற்கும் விதமாகவும் விழாவை கொண்டாடும் விதமாகவும் 250 மில்லி கிராம் தங்கத்தில் ஐந்து சிறிய மான்கள் கிறிஸ்மஸ் தாத்தா வாகனத்தில் அழைத்துச் செல்வது போலவும் கிறிஸ்துமஸ் குடில் அதில் இயேசுவும் சிறிய சிறிய உருவமும் செதுக்கி, கிறிஸ்மஸ் ட்ரீ பனிமலை போன்ற ஒரு சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

பொதுமக்களிடம் நாட்டுப்பற்று மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் இது போன்று சிற்பங்களை உருவாக்கி வருவதாகவும், அது போன்று இந்த வருடம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இந்த சிற்பத்தை உருவாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க