நடிகர் தனுஷ், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் ஸ்பை திரில்லர் திரைப்படத்தில், கிறிஸ் ஈவன்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பாக ‘தி க்ரே மேன்’ என்கிற திரைப்படம் உருவாகிறது. இதில் ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள், இந்த திரைப்படத்தை இயக்குகின்றனர்.இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தி கிரே மேன் என்ற நாவலைத் தழுவி, 200 மில்லியன் டாலர் செலவில் தயாராகும் இந்த திரைப்படத்திற்கான சர்வதேச ஷூட்டிங் லொக்கேசன்கள் இறுதி செய்யப்பட்டு, லாஸ் ஏஞ்சலஸில் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இரு சிஐஏ உளவாளிகளை சுற்றிச் சுழலும் கதையில் தனுஷ் உள்ளிட்டோரின் பாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும்
தனுஷிற்கு வாழ்த்துக்கள்
குவிந்து வருகிறது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு