• Download mobile app
24 Dec 2025, WednesdayEdition - 3605
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்லித்தோப்பில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் பிரசாரம்

November 10, 2016 தண்டோரா குழு

புதுச்சேரியில் நெல்லித்தொப்பு தொகுதிக்கு நவம்பர் 19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் அதிமுக, காங்கிரஸ் என பல கட்சிகள் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் சார்பாக தற்போதைய புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி போட்டியிடுகிறார். அவருக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. அதிமுக சார்பில் ஓம் சக்திசேகர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிர்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், பாஜக ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

அதைத் தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக புதுவை எதிர்க்கட்சித் தலைவர் என். ரங்கசாமி இரண்டாவது நாளாக வியாழக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் பிள்ளைத்தோட்டம் பகுதியில் ஆனந்தமுத்து மாரியம்மன் கோயில் பகுதியில் புதன்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக சத்தியா நகர், வெண்ணிலா நகர், பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தார்.

மேலும் படிக்க