December 17, 2020
தண்டோரா குழு
மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து கோவையில் பவுண்டரி தொழிற்கூடங்கள் இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சிவசண்முக குமார் கூறுகையில்,
“கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் இரண்டாவது நாளாக இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி உற்பத்தி வீதம் ரூ.60 கோடி உற்பத்தி இழப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் முற்றிலும் பவுண்டரி தொழிற்கூடங்கள் முடங்கியுள்ளன. மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வரை போராட்டம் தொடரும்,” என்றார்
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி பாதித்துள்ளனர்.