December 16, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் 900 முதல் 1000 டன் குப்பைகள் சேர்க்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செலப்படும் குப்பையின் அளவை குறைக்க மாநகரில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் மூலம் வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு வரும் குப்பைகளின் அளவு குறைக்கப்படும். தற்போது இதில் 25க்கும் மேற்பட்ட நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,
‘‘இதுவரை 25க்கும் மேற்பட்ட நுண் உயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.அதில் 5க்கும் மேற்பட்ட மையங்களில் உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது,’’ என்றனர்.