• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் விவசாய சங்கத்தினர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம்

December 16, 2020 தண்டோரா குழு

மத்திய அரசு சமீப காலத்தில் கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றாவது நாளாக வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரியும் 2020 மின்சார சட்டத்தை ரத்து செய்ய கோரியும் கோவை மாவட்டம் கணியூரில் உள்ள சுங்கச்சாவடியில்அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் 2020 மின் சட்டத்தை எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர் முன்னதாக விவசாயிகள் போராட்டம் காரணமாக கணியூர் சுங்கச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் படிக்க