கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டை வெளிக்கொண்டு வரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ரூ. 500, ரூ. 1000 செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருந்த ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், 100 ரூபாய் நோட்டுகளுக்குத் திடீரென பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பழைய ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகளை அனைத்து வங்கிக் கிளைகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
நாட்டில் உள்ள ஏ.டி.எம் மையங்கள் புதன், வியாழன் ஆகிய நாட்களில் செயல்படாமல் இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின் நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன. இதையடுத்து நாளை முதல் சில்லறைத் தட்டுப்பாட்டைத் தடுக்கும் வகையில் 50 ரூபாய் நோட்டுகள் அனைத்து ஏடிஎம்-களிலும் தாராளமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் இருந்து 100, 50 ரூபாய் நோட்டுகளை மக்கள் எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதுவரை ஏ.டி.எம்-களில் குறைந்த தொகையாக ரூ.100 மட்டுமே எடுக்கலாம் என்ற நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்