December 15, 2020
தண்டோரா குழு
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை
இந்திய தேர்தல் ஆணையம்ஒதுக்கி வருகிறது. தமிழகம்,புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரஜினி தொடங்கும் கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக பொதுச்சின்னம்
கோரியுள்ளது.மக்கள் சேவை கட்சி அளித்துள்ள விண்ணப்பத்தில் ரஜினி கையெழுத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் சேவை கட்சியின் விண்ணப்பத்தில் இருவிரல் காட்டும் கைச்சின்னம் கோரப்பட்டது; இருவிரல் காட்டும் கைச்சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்ட.
நிலையில் அக்கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கியது.
ரஜினிகாந்த் 1995-ல் பாட்ஷா படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்து இருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.