December 14, 2020
தண்டோரா குழு
செல்போனில் Youtube, Gmail உள்ளிட்ட கூகுளின் சேவைகள் முடங்கியதால் பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ், யூ டியூப், கூகுள் மீட், ஜிமெயில் ஆகிய சேவைகள் திடீரென முடங்கியுள்ளன.
இதனால் செல்போன்கள் மூலம் யூ டியூப், ஜி-மெயில் பயன்படுத்துவோர் அவதிக்குள்ளாகினர். எனினும் கம்ப்யூட்டர்களில் யூ டியூப் வழங்கம் போல செயல்படுகிறது.
இதனை அடுத்து #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஸ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. ஏதேனும் சர்வர் பிரச்னை காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.