• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தயம்: சாம்பியன் பட்டம் வென்றார் சென்னை அஸ்வின் தத்தா

December 13, 2020 தண்டோரா குழு

மிகவும் புகழ்பெற்ற ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ 23வது தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயம் கோவை செட்டிபாளையம் காரி மோட்டர் ஸ்பீட்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கார் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இந்த போட்டியில் பார்முலா எல்ஜிபி4 பிரிவில் சென்னையைசேர்ந்த அஸ்வின் தத்தா (டார்க் டான் ரேசிங்) மற்றும் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை போட்டியில் கோட்டயத்தைச் சேர்ந்த அமீர் சையது (எம்ஸ்போர்ட்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.பார்முலா எல்ஜிபி4 கார்களுக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின்3 பந்தயங்களிலும் முதலிடத்தை அடைய தனக்கான வாய்ப்பை மிகவும் அற்புதமாக பயன்படுத்தி அஸ்வின் 2 பந்தயங்களில் முதலிடம் பிடித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியானது அஸ்வினுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமைந்தது. ஏனெனில் சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் முதலில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் பின்னர் திருத்தப்பட்ட முடிவுகளில் அவர் 12வது இடத்தையும் இறுதியில் வெற்றியாளராக சரோஷும் அறிவிக்கப்பட்டனர்.இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் துவங்கிய முதல் போட்டியில் அவர் திறமையாக காரை ஓட்டி முதலிடம் பிடித்தார். அதேபோல இரண்டாவது போட்டியிலும் கடுமையாக போராடி வெற்றி பெற்றார். அன்று நடைபெற்ற அனைத்து சுற்றுகளிலும் அவர் திறமையாக காரை ஓட்டி தனது வெற்றியை தக்கவைத்துக் கொண்டார்.

இந்த போட்டிகளில் விஷ்ணு பிரசாத் மற்றும் ராகுல் ரங்கசாமி ஆகியோரும் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். போட்டி துவங்கியது முதல் மிகவும் விறுவிறுப்பாகவே இருந்தது. ஒருவரையொருவர் முந்திச் செல்வதற்கு கடுமையாக போராடினார்கள். 3வது பந்தயத்தில் 15வது சுற்றில் விஷ்ணு 6வது திருப்பத்தில் முன்னேற முயன்றார். இதன் காரணமாக அவரது கார் அஸ்வின் காருடன் உரசியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ராகுல் ரங்கசாமி முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து சரோஷ் மற்றும் சந்தீப் ஆகியோர் 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தனர்.3வது சுற்றில் தான் தோல்வி அடைந்தது அஸ்வின் தத்தாவுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த சம்பவத்தின் போது தனது அணியின் வீரர் விஷ்ணுவுக்கு வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால், ராகுல் அவரது வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை.நோவிஸ் கோப்பைக்கான 2 பந்தயங்களிலும் அமீர் சையது அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக காரை ஓட்டி தனக்கான வெற்றியை தக்கவைத்துக் கொண்டார். இது அவரது 6வது வெற்றியாகும். அவரது வெற்றியானது வேகத்தோடு அவரது விவேகத்தையும் காட்டியது. பெண்கள் பிரிவில் எம்ஸ்போர்ட்டின் மீரா எர்டா வார இறுதியின் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார்.

இதேபோல் பெண்களுக்கான நோவிஸ் கோப்பை பிரிவில் அஹுரா ரேசிங்கின் அனுஷிரியா குலாட்டி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க