December 12, 2020
தண்டோரா குழு
கோவையில் அரசு மருத்துவமனையில் காவலர்களை தள்ளிவிட்டுவிட்டு தப்பித்த பிட்பாக்கெட் மன்னனால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ரத்னபுரி பிட்பாக்கெட் மன்னன் காவல் துறையினர் கண்ணில் மண்ணை தூவி தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். காவல் துறையினர் இவனை பிடிக்க பல முயற்ச்சிகளை மேற்க்கொண்டு பிடித்தனர். அவிநாசி சிறையில் அடைப்பதற்க்காக அரசு மருத்துவமனைக்கு கைதிகளுக்கான பரிசோதனை பகுதிக்கு ரத்னபுரி போலிஸார் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் காவல் துறையினரின் கட்டுப்பாட்டை இலகுவாக கடந்து செல்ல போலிஸாரை கீழே தள்ளிவிட்டுவிட்டு கைதி தப்பி சென்றான். கோவையில் அரசு மருத்துவமனையில் காவலர்களை தள்ளிவிட்டுவிட்டு தப்பித்த பிட்பாக்கெட் மன்னனால் பரபரப்பு ஏற்ப்பட்டன. பிட் பாக்கெட் மன்னன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன என்பதால் அவனை பிடிக்க போலிஸார் தேடுதல் வேட்டை துவங்கினர்.