• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை 86 வது வார்டு சௌகார் நகர் பகுதியில் உள்ள சாலையில் தேங்கியுள்ள குப்பையால் பொதுமக்கள் அவதி

December 12, 2020 தண்டோரா குழு

கோவை 86 வது வார்டு சௌகார் நகர் பகுதியில் உள்ள சாலையில் தேங்கியுள்ள குப்பையால், வாகன ஓட்டிகள்,மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 86 வது வார்டு சௌகார் நகர் பகுதியில், ஏராளமான வீடுகள் உள்ளன. மேலும், அந்த பகுதியை சுற்றி சிறிய கடைகள் கார் மற்றும் கனரக உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இப்பகுதியில் மாநகராட்சி தெற்கு மண்டல நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டது. ஆனால், தொட்டியில் சேகரிக்கப்படும் குப்பையை, தூய்மை பணியாளர்கள் முறையாக அள்ளுவதில்லை. இதனால், தொட்டி அடிக்கடி நிரம்பி, குப்பை சாலையில் பரவுகிறது.

கூடுதலாக அங்கேயே வைத்து குப்பையை தரம் பிரிக்கும் பணிகளும் நடப்பதால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும், உதிரி பாகங்கள் வாங்க வெளியூர்களில் இருந்தும் சிலர் வந்து செல்வதால் உள்ளாட்சி துறை அமைச்சரின் தொகுதியே இப்படி உள்ளதே என கூறி செல்கின்றனர்.மேலும் அந்த பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், இதன் மீது ஏறிச்செல்லும் போது, வழுக்கி விழுகின்றனர். 86 வது வார்டுக்கு உட்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை இல்லை. குப்பை அள்ள, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க