December 12, 2020
தண்டோரா குழு
பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை சலிவன் வீதியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோவிலில் அவரது ரசிகர்கள் யாகம் நடத்தி நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தித்தனர். இதேபோல சீரநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தேவராஜ் என்பவர் இடையார்பாளையம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார். அவ்வப்போது ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தும் செய்யும் அவர் தன்னாலான பண உதவியும் செய்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளான இன்று கோவை அரசு மருத்துவமனை வசிக்கும் ஆதரவற்ற நபர்கள் 70 பேருக்கு இலவசமாக முடி திருத்தம் செய்தார்.