December 12, 2020
தண்டோரா குழு
கோவை – மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.அப்போது அப்பகுதியில் காய்கறி ஏற்றிசெல்ல வரும் வாகனங்களின் விவரம், வாகனங்கள் உள்ளே வரும் நேரம் மற்றும் வெளியே செல்லும் நேரங்கள் ஆகியவற்றை அவர் கேட்டறிந்தார். பின்னர், குறிப்பிட்ட நேரங்களுக்கு மேல் வாகனங்களை உள்ளே நிறுத்தக்கூடாது, மார்க்கெட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், காய்கறிக் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக் கூடாது என மாநகராட்சி கமிஷனர் வியாபாரிகளிடம் தெரிவித்தார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகள் வெளியே நின்று செல்வதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனிடையே பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் பேருந்து நிலையத்திற்குள் இயங்கி வந்த வெங்காய மார்க்கெட்டை, எம்.ஜி.ஆர். மார்க்கெட்டை ஒட்டியுள்ள வடக்கு பகுதியிலுள்ள காலி மைதானத்தில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில் அரசன், செயற்பொறியாளர் (ஸ்மார்ட் சிட்டி திட்டம்) சரவணக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்