December 12, 2020
தண்டோரா குழு
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரது போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்கள், ரஜினி வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து,அவரது பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க காலை முதலே ரஜினி வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் இனிப்புகளுடன் குவிந்திருந்தனர். அப்போது
ரஜினியை வெளியே வர வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர்.
கொரோனா சூழலில் ரசிகர்களை நேரடியாக சந்தித்து இனிப்பு வழங்க விரும்பாததால், ரஜினி நேற்றிரவே வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று விட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் வந்து கூறியதை அடுத்து, அவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
சில ரஜினி ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன்பு ரஜினி போல் வேடமிட்டு காத்திருந்தனர்.