• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதி விழாவினையொட்டி முப்பெரும் விழா

December 11, 2020 தண்டோரா குழு

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவினையொட்டி கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் தன்னம்பிக்கை மன்றம் ஆகியவற்றின் தொடக்கவிழாக்களும் இணைந்து முப்பெரும் விழாவாக இந்நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமையேற்ற இவ்விழாவிற்குக் கோவை அகில இந்தியத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் திலகம் மானூர் புகழேந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.மேலும்,விழாவிற்கு மொழித்துறைத்தலைவர் முனைவர் த.விஸ்வநாதன் வரவேற்புரை நல்க அறிவியல் மற்றும் மனிதவியல் புல முதன்மையர் முனைவர் பி.ஹேனா ரேவதி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்புவிருந்தினர் பேசும்போது,

“மகாகவி பாரதியிடம் இருந்த தேசப்பற்று, மொழிப்பற்று ஆகியவற்றை உணரவும் தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதியினைப் பெறவும் இன்றைய இளைய தலைமுறையினர் பாரதியின் கவிதைகளைக் கட்டாயம் படிக்கவேண்டும்” என்று வலியுறுத்தியதோடு “அவருடைய கவிதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க நாம் அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும் என்றும் இவர் போன்ற தமிழ்ச்சான்றோர்களின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் நடக்கும் இத்தகைய விழாக்கள் தமிழ் மொழியின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைக்கும்” என்றும் நம்பிக்கையோடு வாழ்த்திப் பேசினார்.

விழாவில் பாரதி பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப்போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சிறப்புவிருந்தினர் கரங்களால் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பேச்சுப் போட்டியில் மாணவி சு.ஸ்ரீ ரஞ்சனி, கவிதைப் போட்டியில் மாணவர் சு.குற்றாலீஸ்வரன், பாட்டுப் போட்டியில் மாணவி ரா. சுரக்ஷா ஆகியோர் முதல் பரிசினை வென்றனர். இந்நிகழ்வினைத் தமிழ் மன்றம் மற்றும் தன்னம்பிக்கை மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மொழித்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் படிக்க