December 11, 2020
தண்டோரா குழு
கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.48 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் தற்போது தீவரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.1500 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ரூ.48 கோடி ரூபாய்க்கு வாலாங்குளத்தை மேம்படுத்தி அழகுப்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை வாலங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாலாங்குளத்தில் சிறுவர்கள் விளையாட பிளேயிங் ஜோன், சைக்கிளிங், ஸ்கேட்டிங் தளம், தண்ணீரில் மதக்கும் மிதவை பாலம் போன்ற பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அதே போல் உணவு விடுதி, பார்வையாளர் அரங்கு, உடற்பயிற்சி கூடம், அழகு அழகான கண்கவர் மின்விளக்குகள் போன்றவை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதுதவிர கரையோரங்களில் மக்கள் அமர்ந்து வாலங்குளத்தின் அழகை ரசிக்கும் வகையில் இருக்கைகள், செல்பி கார்ணர் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகின்றன.விரைவில் வாலாங்குளத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் நிறைவடையும்,’’ என்றார்.