• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சனி, ஞாயிறு வங்கிகள் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

November 9, 2016 தண்டோரா குழு

ரிசர்வ் வங்கி ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வசதியாக அனைத்து வங்கிகளும் வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததோடு, நவம்பர் 9-ம் தேதி ஒருநாள் வங்கிகள் செயல்படாது என்றும் இரண்டு நாட்கள் ஏடிஎம் செயல்படாது என்றும் அறிவித்தது.

இந்திய நாட்டு மக்களின் முக்கிய பிரச்னையாகத் தற்போது இருப்பது 500 ரூபாய், 1000 ரூபாய் பிரச்னை. கையிருப்பில் உள்ள பழைய நோட்டுக்களை எப்போது, எப்படி மாற்றுவது என்ற யோசனையிலேயே பலருக்கு படபடப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வசதியாக வங்கிகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளை நாடுவார்கள். இதனால் வங்கிகளில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டும் எனவும் அறிவித்துள்ளது

மேலும் படிக்க