• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு ரஜினிகாந்த் ஜனவரியில் பதிலடி கொடுப்பார்

December 10, 2020 தண்டோரா குழு

திராவிட கட்சியினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் திராவிட இயக்கத்தின் கடைசி காலம் என ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலமாக அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் அய்யன் குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அருணகிரி நாதர் திருக்கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் 71 வதுபிறந்த நாளை முன்னிட்டும் புதிய கட்சி துவங்குவதை முன்னிட்டு ரஜினியின் நலனுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் மிருத்தியஞ்ஜெய ஹோமத்தை அவரது அண்ணன் சத்யநாராயணன் 10 சிவாச்சாரியார்கள் கொண்டு ஆயுஷ் யாகம், மற்றும் அபிஷேகம் நடத்தி வழிபாடு நடத்தினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சத்தியநாராயணன்,

திராவிட கட்சியினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தற்போது அவர்களுக்கு கடைசி காலம் ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாநில அளவிலான பதவிகள் வழங்கப்படும். கட்சி பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் இன்னும் அனுமதி தரவில்லை. பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு ரஜினிகாந்த் ஜனவரியில் பதிலடி கொடுப்பார். ரஜினியின் தம்பிகள் அவருடன் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் ரஜினியால் மாற்றத்தை கொண்டு வரமுடியும்.திமுக ,அதிமுக ஆட்சி களை மாற்றி விட்டு மக்கள் நல்லாட்சியை கொண்டு வரவேண்டும் லஞ்சம் ஒழிய வேண்டும் தமிழகத்தில் கல்வியை வளர்க்க வேண்டும் தமிழகத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளார்கள்.

ரஜினி புதிய ஆட்சியில் தொழிற் சாலைகளை அதிக அளவில் கொண்டுவருவார். படித்த இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனர் அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு வருவார்கள் அந்த நிலை உருவாகும். ரஜினி ஆட்சிக்கு வந்தால் இந்த மாற்றங்கள் கண்டிப்பாக வரும் என்று கூறியவர் மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். ரஜினியின் எண்ணங்கள் நல்ல எண்ணங்கள் வேறு எண்ணங்கள் இல்லை என்று கூறியவர். ரஜினி கட்சி ஆரம்பிப்பது நன்றாக இருக்கும் நல்லதே நடக்கும்.கட்சியில் ரஜினியின் ரசிகர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க