• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கோவை கியர் அப் பைக்கர்ஸ் குழு பெண்கள் பேரணி

December 10, 2020 தண்டோரா குழு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கோவை கியர் அப் பைக்கர்ஸ் குழு பெண்கள் அதிக திறன் கொண்ட கே.டி.எம். மோட்டார் பைக்குகளில் பேரணியாக சென்றனர்.

உலகம் முழுவதும் இன்று ஆரஞ்சு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த தினத்தில், ஏற்ற தாழ்வுகள்,ஜாதி மத வேறுபாடுகள் இன்றி சம உரிமை மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் பெண்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள கியர் அப் பைக்கர்ஸ் குழுவை சேர்ந்த பெண்கள் அதி வேக திறன் கொண்ட கே.டி.எம்.பைக்குகளை ஓட்டியபடி ஊர்வலமாக சென்றனர்.

குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரியா தலைமையில் கோவை அவினாசி சாலையில் உள்ள ஈகிள் மோட்டார்ஸ் முன்பாக துவங்கிய இந்த இரு சக்கர வாகன பேரணியை அ.தி.மு.க. இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட இணை செயலாளர் சோனாலி பிரதீப் துவக்கி வைத்தார்.முன்னதாக கே.டி.எம்.இன் புதிய வகை அறிமுகமான கே.டி.எம்.அட்வெஞ்சர் 250 ரக மாடல் பைக்கை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.கோவை அவினாசி சாலையில் துவங்கி ஆனைக்கட்டி பகுதி வரை சென்ற இந்த பேரணியில் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் அதி வேக பைக்குளை ஓட்டி சென்றனர்.

மேலும் படிக்க