• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பரசுராமா வித்யார்த்தி சேவா டிரஸ்ட் சார்பில் நிவாரண உதவி

December 9, 2020 தண்டோரா குழு

கோவையில் பரசுராமா வித்யார்த்தி சேவா டிரஸ்ட் மற்றும் தென்னிந்திய சமையல் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்களுக்கு நிவாரண உதவியாக அரிசி மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

கொரோனா கால ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கியிருந்த நிலையில், விழாக்கள் ஏதும் இல்லாத காரணத்தால் அது தொடர்பான சமையல் தொழிலாளர்கள், நாதஸ்வர தவில் கலைஞர்கள் போன்ற தொழிலாளர்கள் போதுமான வருமானமின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது நிலை அறிந்து பரசுராமா வித்யார்த்தி சேவா டிரஸ்ட்,கோவை மாவட்ட அகில உலக ஜனகல்யாண்,தென்னிந்திய சமையல் தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து இது தொடர்பான அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழிலாளர்கள்,நாதஸ்வர தவில் கலைஞர்கள்,மற்றும் சமையல் கலைஞர்களுக்கு உட்பட பல்வேறு நலிவுற்ற தொழிலாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் மதிப்புடைய அரிசி மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கும் விழா கோவை ராஜவீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

தென்னிந்திய சமையல் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் விஜயன் மற்றும் மாவட்ட தலைவர். பி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ஜி.எம். ரபீக்,ஆகியோர் கலந்து கொண்டு நலிவுற்ற தொழிலாளர் குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான காசோலை மற்றும் அரிசி,மளிகை தொகுப்புகள் அடங்கிய நிவாரண பொருட்களையும் வழங்கினர்.

மேலும் படிக்க