• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வரும் 15ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவிப்பு

December 9, 2020 தண்டோரா குழு

மூலப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், இதற்காக கோவையில் வரும் 15ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் (போசியா) கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் கூறுகையில்,

தொழில் சார்ந்த நெருக்கடிகளை கோவை மாவட்டம் சந்தித்து வருவதாகவும்,குறிப்பாக மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கொரோனா அச்சுறுத்தல் முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தொழில் நடத்த முற்பட்டபோது எந்தவித முகாந்தரமும் இல்லாமல் மூலப்பொருட்கள் விலை 20 முதல் 40 சதவீதம் விலையேற்றமடைந்துள்ளது.இதனால், பொதுத்துறை மற்றும் தனியாரிடம் ஒரு குறிப்பிட்ட விலைக்கு ஆர்டர் எடுத்த தொழிலகங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தார்தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இல்லை. விலையேற்றத்தை கட்டுப்படுத்த கண்காணிப்பு கமிட்டி அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் விலை நிர்ணயித்திருப்பது போல் அதிகபட்ச விலையையும் நிர்ணயிக்க வேண்டும். சிறு-குறு தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அரசே இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டும்.
அரசுக்கு வருவாய் மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பை சிறு குறு தொழில் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதனை கோரிக்கையாக பிரதமருக்கும், துறை அமைச்சர்களுக்கும் அளித்துள்ளோம்.

இந்நிலையில்,எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த செய்தியாளர் சந்திப்பில் டேக்ட், கொசிமா, கௌமா, கிதா, கன்சியா, கோசியா உள்ளிட்ட 19 தொழில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க