December 8, 2020
தண்டோரா குழு
மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளை பாதிக்கும் வேளாண் கருப்பு சட்டங்களை கண்டித்து கோவை இரயில் நிலையத்தை மஜக வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடந்த போராட்டத்தை தொடக்கி வைத்து துணை பொதுச் செயலாளர் சுல்தான்அமீர்,கொள்கை விளக்க அணி மாநில துணைச்செயலாளர் கோவை நாசர் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர் தொடர்ந்து இரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மஜக வினருக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காவல்துறையினர் தடுத்ததால் சாலையில் படுத்து மஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி,தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR.பதுருதீன், பாருக், சிங்கை சுலைமான், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி, கிளை, நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.