December 5, 2020
தண்டோரா குழு
கோவை விமானம் நிலையம் வாயிலாக சார்ஜாவிற்கு செல்ல முயன்ற திருச்சி துவாகுடி பகுதியை சேர்ந்த நாகரத்தினம் என்பவர் கொண்டு வந்த சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்திருந்த போதைப்பொருளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை விமான நிலையம் வழியாக சார்ஜா செல்ல முயன்ற நாகரத்தினம் என்பவரை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் இந்த சூட்கேஷ் நண்பருடையது காலியாக உள்ளது பின்னாடி வருகிறேன் என தெரிவித்து விட்டு சென்று விட்டார். சோதனை செய்யுங்கள் என நாகரத்தினம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் அதிகாரிகள் அவர் கொண்டு வந்த சூட்கேசினை சோதனை செய்த போது , ஒரு பகுதியில் தடுப்பு போல் அமைத்து அதனுள் மறைத்து வைத்திருந்த 1200 கிராம் போதைப்பொருளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர், மேலும் திருச்சி துவாகுடியை சேர்ந்த, நாகரத்தினத்திடம் சூட்கேசை கொடுத்தது யார் ?நாகரத்தினத்திற்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் மதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் மேற்கொண்டு இந்த சம்பவம் தொடர்பாக பீள மேடு காவல்நிலையத்தில் புகாரளித்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.