December 5, 2020
தண்டோரா குழு
பி. எஸ். ஜி. ஹைடெக் கல்லூரி மாணவருக்கு யுனெஸ்கோ அமைப்பின் “க்ரீன் ஃபின் 2020 ம் ஆண்டிற்கான அங்கீகாரம்” கோவை நீலாம்பூர் இல் அமைந்துள்ள பி.எஸ்.ஜி.ஹைடெக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பி. இ. சிவில் இன்ஜினியரிங் மாணவர் திரு. ஜி. யோகபாலாஜிக்கு சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ வின் மாணவர்களுக்கான பெருமைக்குரிய “க்ரீன் ஃபின் 2020 அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் யுனெஸ்கோ நடத்திய “காலநிலை மெய்மை செயல்திட்டம் ” என்னும் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டார். மேலும் மதுரை மற்றும் கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு காலநிலை மாற்றங்கள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.மத்திய அரசின் மனிதவளம் மற்றும் மேம்பாடு அமைச்சரகம் இவரின் சமூக பங்களிப்பினை பாராட்டி “சமதான்” செயல் திட்டத்தில் உறுப்பினராக நியமித்தது. ஜி. யோகபாலாஜி மட்டுமே நம் இந்திய நாட்டின் சார்பில் மேற்கூறிய பன்னாட்டு கருத்தரங்கில் மாணவப் பிரதிநிதியாக கலந்துகொண்டு, உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து சிறப்புரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டத்தக்க வகையில் அமைந்த அவரின் பேச்சுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் அல்கோர் “க்ரீன் ஃபின் 2020 அங்கீகாரம்” அளிக்கப்பட்டுள்ளது.