December 4, 2020
தண்டோரா குழு
ஐதராபாத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் R. நந்தகுமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதில் பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் மாவட்ட துணைத்தலைவர் மதன்மோகன் மாவட்ட செயலாளர் கண்மணி பாபு, ஜெகன் உக்கடம் மண்டலத் தலைவர் சேகர் முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ் மண்டல செயலாளர்கள் அரவிந்த் அரவிந்த் நரேஷ்குமார் மகளிர் அணி தலைவர் தீபிகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் மாவட்ட செயலாளர் நகர்புற வளர்ச்சி அபிநவ் மற்றும் புல்லட் சதீஷ் ஊடகப் பொறுப்பாளர். சபரிகிரிஷ்,மாநில செயலாளர் ஊடகப்பிரிவு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.