December 4, 2020
தண்டோரா குழு
டாகடர்.பாலசுந்தரம் சாலையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி அலுவலகத்தை தபெதிக அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரப்ப்பான சூழல் நிலவியது.
வெறும் 15 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருத மொழிக்கு 1000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி இருக்கின்றது எனவும் இது தேவையற்றது எனவும் தெரிவித்தனர். சமஸ்கிருத மொழியில் செய்தி்வாசிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்
போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிக அமைப்பினர் தெரிவித்தனர்.