December 3, 2020
தண்டோரா குழு
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் நேரம் வந்துவிட்டது என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாக அறிவித்துள்ள ரஜினி சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன்.அரசியல் மாற்றம் என்பது நடந்தே ஆக வேண்டும் கொடுத்த வாக்கில் இருந்து எப்போதும் தவற மாட்டேன். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன்.அரசியல் மாற்றம் தேவை… கட்டாயம் நிகழும்.தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி என்றார்.