• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மாசை கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை

November 30, 2020 தண்டோரா குழு

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த அம்மாசை என்ற பெண் கடந்த 2011 ம் ஆண்டு மாயமானார்.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோவை இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவர் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அம்மாசை என்ற பெண்ணை கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேலின் மனைவி மோகனா , ஓடிசாவில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்து இருந்ததும் , ரூ.12 கோடி மோசடி தொடர்பாக ஓடிசாவில் மோகனா மீது 5 வழக்குகள் இருந்த நிலையில் அவரை காப்பாற்ற ஈ.டி.ராஜவேல் முயற்சி கொண்டதும் தெரியவந்தது.இந்நிலையில்,சொத்து விவகாரம் தொடர்பாக தன்னிடம் வந்த அம்மாசை என்ற பெண்ணை தனது உதவியாளர் பொன்ராஜ், ஓட்டுனர் பழனிச்சாமி ஆகியோர் உதவியுடன் வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல் கொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும் மனைவி மோகனா உயிரிழந்து விட்டதாக இறந்த அம்மாசையின் உடலை காட்டி அனைவரையும் ஏமாற்றியதுடன், மாநகராட்சியில் இறப்பு சான்றிதழையும் பெற்றார். இறப்பு சான்றிதழை ஒடிசாவில் காட்டி மனைவி மீதான வழக்குகளை வழக்கறிஞர் ஈ.டி.ராஜவேல் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இதற்கிடையே,மணிவேல் கொலை தொடர்பான விசாரணையின் போது ,அம்மாசை கொலை செய்யப்பட்டது தெரியவரவே, காவல் துறையினர் 2013 ம் ஆண்டு ஈ.டி.ராஜவேலையும், அவரது மனைவி மோகனாவையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை 5 வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் தம்பதி ஈ.டி.ராஜேவேல், அவரது மனைவி மோகனா ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள் மற்றும் உதவியாளர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேலும் இறந்த அம்மாசையின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 1.20 லட்சம் வழங்கவும் உத்திரவிடப்பட்டது. இதனையடுத்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இதற்கிடையே, 4 வது குற்றவாளியான பொன்ராஜ் என்பவர் அப்ரூவராக மாறிய நிலையில், வழக்கு விசாரணையின் போது பிறழ்சாட்சியாக மாறினார். இதனையடுத்து அவர் மீது தனியாக கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

மேலும் படிக்க