November 30, 2020
தண்டோரா குழு
லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து கோவையில் போக்குவரத்து இணை ஆணையரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
வேகக்கட்டுப்பாட்டு கருவி,ஜிபிஎஸ் கருவி,மற்றும் ரிஃப்ளக்டர் டேப் ஒட்ட வேண்டும் ஆகியவற்றை கட்டாயப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து கோவையில் போக்குவரத்து இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலிய பெருமாள்,
ஏற்கனவே கொரானா கால ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எங்களது தொழில் தற்போது மத்திய மாநில அரசுகளின் புதிய உத்தரவுகளால் மேலும் பாதிக்கப்படும் என கூறிய அவர்,புதிய கட்டுப்பாடுகள் விதிக்கு, எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லாரி உரிமையாளர்கள் திரளாக சென்று மனு அளித்துள்ளதாகவும்,
இந்தப் போராட்டத்திற்கு பின்னரும் மத்திய மாநில அரசுகள் எங்களது கோரிக்கையை பரிசீலிக்க வில்லையெனில் நாடு தழுவிய அளவில் லாரி வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.