• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரூபாய் 3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

November 28, 2020 தண்டோரா குழு

இரட்டிப்பு பணம் தருவதாக ரூ3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் அங்காடி புரத்தை சேர்ந்தவர் அனில்குமார் 43 கோவை சாய்பாபா காலனி பகுதியில் தங்கியிருந்த இவர் பிரேம், செல்வராஜ், சுரேஷ், ரவிக்குமார், ஆர்த்தி, பாபு ஆகியோருடன் சேர்ந்து ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தை நடத்தி வந்தார். நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் செலுத்திய பணத்தை இரட்டிப்பாக்க தருவதாக அறிவித்து இருந்தார்.

கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டும்தொகையை கொடுத்து வந்த நிலையில் அதன் பின் பணம் கொடுக்கப்படவில்லை, இதை அடுத்து 2019ஆம் ஆண்டு கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேம், செல்வராஜ் ,சுரேஷ் ஆகிய மூவரை எட்டு மாதங்களுக்கு முன் கைது செய்தனர். தலைமறைவான அணில் குமார் உள்ளிட்ட 4 பேரை தேடி வந்தனர் இந்நிலையில் தலைமறைவாக இருந்த அனில் குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் படிக்க