• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விருதுகளை அள்ளிக்குவித்து வரும் வால்பாறை கணித ஆசிரியர் !

November 28, 2020 தண்டோரா குழு

கோவை பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை ஒன்றியத்தில் உருளிக்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர்
கா.வசந்தகுமார்.இவர் கசக்கும் கணிதத்தை மாணவர்கள் பால் இனிக்கும் கணிதமாக மாற்ற துணைக்கருவிகள் தயாரித்து எளிய முறையில் ஆடல்,பாடல்களுடன் கற்பித்து வருகிறார். காணொளிகளை Q R Code ஆக மாற்றி பயன்படுத்த பயிற்சி அளித்து வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் இணைய வழியில் எளிமையான கற்றலை மாணவமணிகளுக்கு கற்றுத் தருகிறார்.மேலும்,மரம் நடுவிழா விழிப்புணர்வினை மாணவர் மத்தியில் ஏற்படுத்தியும் தமிழர் பாரம்பரிய கலைகளை மாணவர்களிடையே வளர்த்தும் வருகிறார். கொரோனா காலகட்டத்திலும் கணித கருத்துகள் மாணவர் மத்தியில் சென்றடைய இணையவழிக் கல்வி மூலமும்,புலனவழிக் கல்வி மூலமும் கற்பித்து வருகிறார்.

இவரது பணியினைப் பாராட்டி TNTP ஐந்து சான்றிதழ்களையும்,DIKSHA மூன்று காணொளிகளையும் பதிவு செய்து பாராட்டியுள்ளது.இவரது கல்விச் சேவையைப் பாராட்டி தன்னார்வ அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் இவருக்கு வானமாமலை விருது, Dr.இராதாகிருஷ்ணன் விருது, Best Teacher Award 2020, Best Achiever Award 2020, கல்வி ரத்னா விருது, ஆசிரியர் சிற்பி விருது,ஆளுமை ஆசிரியர் செம்மல் விருது, தமிழறிஞர் அண்ணா விருது, அறிவுச்சுடர் காந்தி விருது, கனவு ஆசிரியர் விருது, அருட்ஜோதி விருது, தமிழ் விஞ்ஞானி விருது, கலாம் அறிவு மாமணி விருது, கலாம் கனவு நாயகன் விருது, சர்தார் வல்லபாய் படேல் தேசிய விருது 2020, ஆசிரியர் மாமணி விருது, தேசத்தின் சிற்பி உட்பட 33 மேற்பட்ட விருதுகளை அளித்துள்ளன.

110 நாடுகள் கலந்து கொண்ட Global Teacher Award என்ற உயரிய விருது இந்தியா சார்பில் இவருக்கு டிசம்பர் மாதம் 20ம் நாள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க