November 24, 2020
தண்டோரா குழு
உலகின் முன்னணி ஏர் கம்ப்ரஷர் உற்பத்தியாளரான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில், சார்லெட்’ல் தனது புதிய, விரிவாக்கப்பட்ட அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 20, வெள்ளியன்று நடந்த விழாவில், எல்ஜி பணியாளர்கள் பங்கேற்றனர். எல்ஜி வடஅமெரிக்கா பிரிவின் தலைவர் டேவிட் பக் மற்றும் எல்ஜி எக்யூமென்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் ஆகியோர் பேசினர். அதிக இடவசதி கொண்ட இந்த அலுவலகத்தை,இருவரும் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் வட அமெரிக்கா தலைவர் டேவிட் பக் பேசுகையில்,‘‘2020ம் ஆண்டு, பல நிறுவனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எல்ஜி எக்யூப்மென்ட் நிறுவனத்துக்கு இது ஒரு முன்னேற்றம். அனைத்து வசதிகளையும் வேறு இடத்திற்கு மாற்றியமைத்து, ஏர் கம்ப்ரஷர் வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. கூடுதல் வேலைவாய்ப்பை அளித்துள்ளது,’’ என்றார்.
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் பேசுகையில்,
‘‘நாடு முழுவதும் தொற்று பரவிய இந்த சூழலிலும், வணிகத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும், எல்ஜி தனது உற்பத்தி விரிவாக்கத்திற்கு மேலும் சில வசதிகளை விடாமுயற்சியுடன் மேற்கொண்டுள்ளது. 60ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள எல்ஜி நிறுவனம், ஏர் கம்ப்ரஷர் உற்பத்திக்காகவும், விநியோகத்திற்காகவும் மேலும் பல வசதிகளை இங்கு ஏற்படுத்தியுள்ளது உற்சாகப்படுத்துவாக உள்ளது என்றார்.
ஏர் கம்ப்ரஷர் தொழில்நுட்பத்தில் அதிநவீன முறையில் முன்னணியில் 120 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வகையான ஏர் கம்ப்ரஷர்களை வழங்கி வருகிறது. ஆயில் மற்றும் ஆயில் இல்லா ரோட்டரி ஸ்க்ரூ கம்ப்ரஷர்கள், ரெசிப்ரோகேட்டிங் கம்ப்ரஷர்கள், சென்ட்ரிப்யூகல் கம்ப்ரஷர்கள், டிரையர், பில்டர் உள்ளிட்ட அனைத்து உதிரிபாகங்களையும் அளித்து வருகிறது. 400க்கும் மேற்பட்ட காற்றழுத்த அமைப்புகள், எல்ஜி மறுவரையின் நம்பிக்கை, செயல்திறன் மற்றும் சிக்கனம் ஆகியவற்றால் உலகம் முழுவதும் 2+ மில்லியன் கம்ப்ரஷர்களை நிறுவியுள்ளது. சிறப்பான ஒட்டுமொத்த மேலாண்மைக்கான 2019ம் ஆண்டு டேமிங் விருதை வென்றுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், ஒரு ஏர் கம்ப்ரஷர் நிறுவனம் இந்த விருதை வென்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.