November 19, 2020
தண்டோரா குழு
இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐடிஎப்), #IndiaforSure என்ற புதிய ஹாஷ்டேக் ஒன்றை துவக்கியுள்ளது. லிங்க்ட்இன், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராமில் பயன்படுத்தலாம்.SURE என்றால், ஆங்கிலத்தில் நிலையான, சுற்றுச்சூழல் சார்ந்த , நம்பகத்தன்மை மற்றும் நெறி சார்ந்த நிலைப்பாடு என்ற பொருளில் அமைந்துள்ளது.
இந்த துறையில் சாதித்த ஜவுளித்தொழில் முனைவோர்கள், நம்பகத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து, எவ்வாறு சிறப்பான முன்னேற்றம் பெற்றனர் என்பதை # INDIAFORSURE ல், பகிர்ந்து கொள்வர். பிறரை ஊக்கப்படுத்தும் விதமாக, அனைத்து இந்திய ஜவுளி தொழில் முனைவோர்கள் இதில் பங்கேற்று தங்களது அனுபவக்கதைகளை பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம். சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒரு இணையத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில், சுற்றுச்சூழல் நாளன்று இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன், ‘இன்டியா பார் ஷ்யூர்’ என்ற புதிய முயற்சியை தொடங்கியது. தற்போது இது, ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான முயற்ச்சியாகும் வகையில் முன்னேறியுள்ளது. ஐடிஎப், தமிழ்நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.
இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில்,இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதோடு, அதிக அளவில் வேலை வாய்ப்பை தரும் தொழிலாகவும் உள்ளது. நேரடியாக 4.5 கோடி பேரும், மறைமுகமாக 6 கோடி பேரும் பயன்பெற்று வருகின்றனர். இந்திய ஜவுளித்துறையானது, நுாலிழை,மதிப்பு கூட்டு பொருட்கள், துணி வகைகள்,வீட்டு உபயோக பொருட்கள் என ஆயத்த ஆடை வகைகள் வரை அனைத்து துறைகளிலும் வலுப்பெற்றுள்ளது.சர்வதேச அளவில் கோவிட் தொற்றுக்குப்பின், ஜவுளி இறக்குமதியாளர்கள், இந்தியாவில் துணி வகைககளை வாங்க ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர்.
இந்திய ஜவுளி உற்பத்தி திறனை, நிலைத்தன்மை,சுற்றுச்சூழல்,நம்பகத்தன்மை மற்றும் நெறிமுறைகள் சார்ந்து,வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள சரியான தருணம் இது. ஜவுளித்தொழில் முனைவோர்,குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் , சர்வ்தேச அளவில் பிராண்டுகள் மற்றும் வடிக்கையாளர்களுடன் இணைய ஐந்தே முயற்சி பேருதவியாக இருக்கும்.
இது குறித்து, ஐடிஎப் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில்,
’’பல மாற்றங்களை உருவாக்கும் தளமாக இது இருப்பதோடு, ஒவ்வொருவரும் ஜவுளித்தொழில் உள்ள அனைத்து வகையான முன்னேற்றங்களையும் கற்றுக் கொள்ள வாய்ப்புகளை தரும்.இந்த தளத்தில் இந்திய அளவில் உள்ள ஜவுளித்தொழில் முனைவோர், தங்களது வெற்றிப்பயணத்தையும், சாதனைகளையும்,முயற்சிகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
இந்திய அரசின் நோக்கமான,’ஆத்ம நிர்பர் பாரத்’ என்ற சுய சார்பு இந்தியாவ ஜவுளி துறையில் உருவாக்க ஐடிஎப் முயற்சியான #INDIAFORSURE முயற்சி . அனைத்து விதமான ஆடைகளுக்கும், சர்வதேச நாடுகள் விரும்பும் இடமாக இந்தியாவை மய்யப்படுத்த , இணைப்பு பாலமாக இந்த முயற்சி உதவும்.