• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஸ்டாலினை கிண்டல் செய்து மீண்டும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

November 19, 2020 தண்டோரா குழு

கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து மீண்டும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சுவரொட்டிகளை திமுகவினர் கிழித்து அகற்றினர்.

2021 சட்ட மன்ற தேர்தலில் திமுக முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலினும்,அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இரண்டு கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளை சமூக வலைதளங்கள் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து ரயில் நிலையம், டவுன் ஹால், லங்கா கார்னர் உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.அதில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படங்களுடன் ஊரடங்கில் அயராது உழைத்தவரா? Wig மாட்டியவரா? எனவும், மற்றொரு சுவரொட்டியில் விவசாயிகளுக்காக டெல்டாவை பாதுகாத்த முதல்வரா? மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் கையெழுத்திட்டவரா? எனவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையிலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேசமயம் எந்த அமைப்பின் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் சுவரொட்டியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் டவுன் ஹால் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த இந்த சுவரொட்டிகளை திமுகவினர் கிழித்து அகற்றினர்.ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டல் செய்து கோவையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் அதே போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ‌

மேலும் படிக்க