November 18, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தினுள் நுழைய வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்கள் வழக்கறிஞர்கள்,காவல்துறையினருக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட
மாவட்ட நீதித்துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்பில்,
நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்கள் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் கோர்ட் வளாகத்திற்குள் வரும் போது வக்கீல் சான்றிதழுடன், வழக்கு எண், கோர்ட் பெயர், வாய்தா தேதி ஆகிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும் எனவும்,இந்த ஆவணங்கள் இல்லாமல் வருபவர்கள் கோர்ட்டிற்குள் அனுமதிக்கபட மாட்டார்கள் எனவும், மேலும்,நீதிமன்ற வளாக்ததுக்குள் செயல்படும், போஸ்ட் ஆபிஸ் மற்றும் வங்கிக்கு வருபவர்கள் வங்கி தொடர்பான, பாஸ்புக், ரசீதுகள் எடுத்து வர வேண்டும் எனவும்,இந்த கட்டுப்பாடுகள் மறு உத்தரவு வரும் வரை, தொடர்ந்து பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.