• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீபாவளியை முன்னிட்டு உலக நன்மைக்காகத் கூட்டுப்பிரார்த்தனை – ஹிந்துஜா நிறுவனம் ஏற்பாடு

November 17, 2020 தண்டோரா குழு

எண்பதுகளின் தொடக்கத்தில் லண்டன் நகரத்துக்கு தீபாவளியை அறிமுகம் செய்தது ஹிந்துஜா குடும்பம். அவர்களது தனிப்பட்ட கொண்டாட்டமாக இருந்து வந்த தீபாவளி, லண்டனில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சமூக நாட்காட்டியில் ஒரு அங்கமாக மாறியது. இன்று, லண்டன் நகரமெங்கும் தீபாவளி நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் டைம்ஸ் சதுக்கத்தில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

சவால் நிறைந்ததாக உள்ள இந்த ஆண்டில் முதலில் பொருளாதார மந்தத்தால் சிதைவு உண்டானது. அதனைத் தொடர்ந்து இந்த உலகை கோவிட்-19 ஆக்ரமித்துக் கொண்டது. அதனால், இந்த ஆண்டு வழக்கமான கொண்டாட்டத்தை நிகழ்த்த முடியாது என்பதை உணர்ந்தது ஹிந்துஜா குடும்பம். ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியினால் மக்கள் கூடுவது சாத்தியமற்ற நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் அடிப்படையைத் தக்கவைக்கும் வகையில் ஹிந்துஜா குடும்பம் அதனை வேறொரு பரிமாணத்திற்கு உயர்த்தியது. இதனால், கொண்டாட்டங்கள் உலக நன்மைக்கான ஒரு மெய்நிகர் கூட்டுப் பிரார்த்தனைக்கு வழிவிட்டன.

இங்கிலாந்து நாட்டு தேவாலயங்களின் தலைவரான கேண்டர்பரி ஆர்ச்பிஷப் உட்பட வெவ்வேறு மதத் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த சவாலான காலகட்டத்தை உறுதியுடன் மக்கள் எதிர்கொள்வதற்கான வல்லமையைத் தந்தன அவர்களது நல்வாழ்த்துகள் மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகளில் ஆழ்ந்திருக்கும் அத்தலைவர்களின் ஞானக் கருத்துகள். இந்த நிகழ்வின் சாரத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் கைலாஷ் கெர், சோனு நிகம், ரகத் பதே அலிகான், அனூப் ஜலோடா, சங்கர் மகாதேவன், ஷான், அனுராதா பட்வால் என்று இந்தியாவின் மிக முக்கியமான கலைஞர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேரலையாகத் தங்கள் பங்களிப்பை நல்கினர். கைலாஷ் கெர், சோனு நிகம், ரகத் பதே அலிகான் ஆகியோர் தொய்வுற்றிருக்கும் மக்கள் எழுச்சியுறும் வகையில் நேர்மறையான கருத்துக்களைக் கொண்ட சிறப்பு பிரார்த்தனைப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர்.

அரச குடும்பத்து உறுப்பினரான மேன்மை பொருந்திய இளவரசர் சார்லஸ் தீபாவளி விளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இளவரசர் எட்வர்ட், அரசியல் தலைவர்களிடம் இருந்து வந்த தகவல்களுக்குத் தலைமை வகித்தார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டு உள்துறைச் செயலர் பிரீதி படேல், வெளியுறவுத்துறை தனி அமைச்சர் லார்டு தாரிக் அகமது, நன்னம்பிக்கை துறை அமைச்சர் லார்ட் க்ரீன்ஹால்ச், லண்டன் மேயர் சாதிக் கான் உட்பட பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை வரிசையாகத் தெரிவித்தனர்.

இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர், மகாராஷ்டிரா ஆளுநர், இங்கிலாந்துக்கான இந்திய தூதர் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை ஹிந்துஜா குடும்பத்துக்குத் தெரிவித்துக் கொண்டனர்.

இது பற்றி ஹிந்துஜா குழுமத்தின் துணைத்தலைவர் ஜி.பி.ஹிந்துஜா பேசுகையில்,

“இந்திய தீபஒளித் திருநாளான தீபாவளி ஒரு ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவத்தைக் கொண்டது. இந்த சவாலான காலகட்டத்தை அனைவரும் எதிர்கொண்டு வருவது குறித்தும், உலகம் முழுக்க நாடு, நிறம், மதம், பாலின பேதம் ஏதுமற்று மில்லியன்கணக்கான மக்கள் கோவிட்டால் பாதிக்கப்படுவதும் குறித்து நாங்கள் சிந்தித்தோம். இதனால் வழக்கமான கொண்டாட்டம் நிகழ முடியாது என்று உணர்ந்தோம். நமது வேலையாக இருந்தாலும், கொண்டாட்டமாக இருந்தாலும், நாம் வாழும், செயல்படும் சமூகத்தின் கூட்டுநலனை மனதில் கொண்டே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். எனது மறைந்த தந்தையார் இந்த மதிப்பீட்டை எப்போதும் எங்களுக்குள் சிறிது சிறிதாக ஊட்டிக்கொண்டே இருந்தார். சில விஷயங்களை வித்தியாசமாகச் செய்யும் விருப்பம் கொண்ட நான், கோவிட் கட்டுப்பாடுகளால் மட்டுப்பட தயாராக இல்லை. அதனால், அதே கொண்டாட்ட மனோபாவத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் விதமாக, உலக நல்வாழ்வுக்காக ஏன் நாம் பிரார்த்திக்கக் கூடாது என்பது பற்றிப் பேசினோம். அமெரிக்கா முதல் தூர கிழக்கு நாடுகள் வரை ஆயிரக்கணக்கானவர்களால் எங்களது முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டதைப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். எங்களுக்கு நல்வாழ்த்துகளை அனுப்ப முயற்சிகள் மேற்கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க